தந்தை பெரியாரும் தாழ்த்தப்பட்டோரும் - 4



உண்மை, விடுதலை இதழ்
தலையங்கம், கட்டுரைகள்


மல்லிகை மலருக்கு மணமுண்டு என்று எவரும் நிரூபிக்க வேண்டியது இல்லையோ, அதைப்போல திராவிடர் கழகம் என்றாலே தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மை இனம் ஆகிய மக்களுக்காக வாதாடும், போராடும் இயக்கம் என்பதை மக்கள் தெளிவாக உணர்ந்திருக்கிறார்கள்.

திராவிடர் கழகம் ஊருள் நிறை குடிநீர் நிலைக்கு ஒப்பாகும். திராவிடர் கழகம் பயன்மரம் ஊருள் பழுத்தற்கு ஒப்பாகும்.

அய்யாவின் உடல் மறைவிற்குப் பிறகு இயக்கத்திற்கே பெரும் சோதனை ஏற்பட்டது. கூடவே இருந்தோர் குழப்பம் விளைவிக்க எண்ணினர். நெருக்கடி நிலை பிரகடனப்படுத்தப்பட்ட பிறகு இந்த இயக்கத்தையே அழித்து விடுவது என்று பார்ப்பனக் கும்பல் பழிவாங்கத் துடித்தபோது பக்குவமாக இயக்கத்தையே காத்து, அன்னை மணியம்மையாரின் இழப்பையும் தாங்கி தாழ்த்தப்பட்ட மக்களுக்காக பொதுச்செயலாளர் செய்தவைகளையும் குறிப்பிட விரும்புகிறோம்.
வர்ணாஸ்ரமத்தின் வரலாறு மராட்டிய மண்ணிலே ஒரு புரட்சிக்காரர் ஜோதிராவ் புலே - உண்மை 14.5.1974

சங்கராச்சாரிக்குக் கண்டனங்கள் வெடிக்கட்டும். அர்ச்சனை நடத்த அரிஜனங்களுக்குத் தகுதி இல்லை - சங்கராச்சாரி

பகிரங்கமாகத் தீண்டாமையைப்பற்றி பிரச்சாரம் செய்து வடநாட்டில் பல இடங்களில் ஆதிதிராவிட சமுதாயத்தைச் சார்ந்த அப்பாவி மக்களை உயிருடன் கொளுத்தும் சித்திரவதைக் காட்சிகள் தொடர்ந்து நடைபெறுவதற்கு மறைமுகமாக ஊக்கம் தருகின்ற வகையில் பூரி சங்கராச்சாரி பேசினார் என்பதற்காக மத்திய அரசு, பொதுமக்களின் ஆத்திரத்திலிருந்து அவரைக் காப்பாற்றுவதற்கு கைது என்ற நாடகத்தைச் செய்து புதுவைச் சிறையில் சில நாள் அவரை சொகுசு வாழ்க்கை வாழச் செய்தது என்பதும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.
மனிதகுலத்தின் - மனிதாபிமானத்தின் மாபெரும் வைரிகள் சங்கராச் சாரிகள் என்பதை தந்தை சதக்கங்களிலெல்லாம் பரவும்படி தீவிர சங்கராச்சாரி கண்டனம் பெருகவேண்டும், வெடிக்கவேண்டும்.
- தலையங்கம் உண்மை 1.7.1974

தீண்டாமைக்குத் தீர்வு கண்டவர் பெரியார் - சங்கமித்ரா
- உண்மை 1.12.1974

மராட்டியப் பெரியார் மகாத்மா ஜோதிராவ் புலே
- உண்மை 15.05.1976

அம்பேத்கருக்கு ஆத்மா, கடவுள் நம்பிக்கை உண்டா?
- உண்மை 15.07.1976

காந்தியாருக்கு டாக்டர் அம்பேத்கர் அவர்களின் கேள்விக்கணைகள்
- உண்மை 15.11.1976

ஜெகஜீவன்ராம் குரல் கொடுக்கிறார்                - உண்மை 12.2.1978
தீண்டாமையின் ஆணிவேரை அடியோடு பிடுங்கி எறியாத வரையில் அதை ஒழிக்க முடியாது என்றும் தாழ்த்தப்பட்ட சமுதாய மக்களில் பெரும்பாலோர் தங்கள் இழிவு ஒழிந்து உரிமை பெறவேண்டும் என்றும் விரும்புகின்றனர்; என்றாலும் இதுபோன்ற சமுதாயப் புரட்சிக் கருத்துகளை ஏற்காமல் பார்ப்பன அடிமைத்தனத்திற்குத் தங்களை பலிகடாக்களாக ஆக்கிக் கொள்கிறார்கள் என்ற பாபு ஜெகஜீவன்ராமின் இந்த முழக்கம் அவர்களைத் திருத்துமாக!               - தலையங்கம் உண்மை 15.2.1978

உத்தியோக மரியாதை - கக்கன் அமைச்சராக இருந்ததால் அவருக்கு வரவேற்பு மரியாதை! ஆனால் அவர் ஒரு அரிஜனனாக இருந்ததால் வீட்டிற்குள் நுழைந்துவிட்டார் என்பதற்காக தீட்டைக் கழிக்க புண்ணிய தானங்கள் - கட்டுரை - உண்மை 15.2.1978

திராவிட மாணவர் கழக கோரிக்கை எண் - 10 - தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட பட்டதாரிகளுக்கு உடனே வேலை கொடுக்க வேண்டும்.

கோரிக்கை எண்  12:  தாழ்த்தப்பட்ட , பிற்படுத்தப்பட்ட மக்கள் தொகை  அடிப்படையில் மாநில, மத்திய அரசுக்கு உட்பட்ட எல்லாத் துறைகளிலும் வேலை வாய்ப்பில் இடஒதுக்கீடு செய்க!
- பொதுச்செயலாளர் - உண்மை 15.10.1978

இந்து மதத்துக்குள்ளே மனிதனை மனிதன் ஜாதியின் பெயரால் சுரண்டிக் கொண்டிருக்கிறான். மனிதன் தொட்டால் தீட்டு என்கிறான். உழைக்க ஒரு ஜாதி. உண்டு கொழுக்க ஒரு ஜாதி.
-  தலையங்கம் உண்மை 15.5.1979

படித்துவிட்டு எவ்வித வேலை வாய்ப்பும் இல்லாமல் பல ஆண்டுகளாக விரக்தியுடன் வேதனையில் ஈடுபட்டுத் திசைமாறும் தீப்பிழம்புகளாக மாறிடும் லட்சோபலட்சம் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உரிமையைப் பெறுவதற்கும் நாம் இடையறாத நிகழ்ச்சிகளை வரும் ஆண்டில் மேற்கொண்டே ஆக வேண்டும் - பொதுச்செயலாளர் கி.வீரமணி உண்மை 15.9.1979 

 தீண்டாமை நோயினைப் பொறுத்த வரையில் சட்ட ரீதியாகக் கூட (அரசியல் சட்டரீதியாக ஒழிக்கப்பட்டது) ஒழிக்கப்படவில்லை.
இதை உணர்ந்து ஒப்புக்கொண்ட வகையில்தான் டில்லி அரசால் நியமனம் செய்யப்பட்ட அனைத்திந்திய தீண்டாமை ஒழிப்புக் குழு சென்ற 1969 ஆம் ஆண்டில் தந்த அதன் அறிக்கையில் தாழ்த்தப்பட்டவர்கள் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட வேண்டியது மிகவும் அவசியம் என்று பரிந்துரைத்தது.                                  
- உண்மை 1.7.1975

கடந்த ஏழாண்டு காலத்தில் மட்டும் நானூற்றுக்கும் மேற்பட்ட செய்திகளை தாழ்த்தப்பட்ட மக்களுக்காகக் கட்டுரை வடிவிலும் வேறு பல முறைகளிலும் சிறப்பாக வெளியிட்டு இருக்கிறது விடுதலை ஏடு.
தந்தை பெரியார் அவர்கள் தேர்ந்தெடுத்த - பேச்சு, எழுத்து ஆகிய பிரச்சார முறைகளையும், வன்முறை தவிர்த்த போராட்டம், கிளர்ச்சி போன்ற நடைமுறைகளையும் அரசின் - மக்களின் கவனத்தை ஈர்க்க தமிழர் தளபதி அவர்களும் கையாண்டு வருகிறார்கள் என்பதை நாடறியும்; நல்லறி வாளர்கள் போற்றுகிறார்கள்.

அன்றாடம் பேச்சுகளில் எழுத்துகளில் பொதிந்து கிடப்பவைகளை இங்கு சுட்டிக் காட்டவேண்டிய அவசியமில்லை. ஆனால் விடுதலை நாளேட்டில் எழுதப்பட்ட தலையங்கங்களை மட்டும் தேதிவாரியாகத் தருகிறோம்.

27.4.1974 - திசை திருப்ப முயலும் பார்ப்பன விஷமம்
8.5.1974 - தாழ்த்தப்பட்டோரும் திராவிட இயக்கமும்
9.5.1974 - தாழ்த்தப்பட்டோரும் திராவிட இயக்கமும்
22.5.1974 - பிற்படுத்தப்பட்டோரும் மத்திய அரசும்
23.5.1974 - பிற்படுத்தப்பட்டோரும் மத்திய அரசும்
10.10.1974 - இன்னுமா? இதிலுமா வருணாசிரமம்? ஏர் இந்தியா
11.1.1975   - ஜெகஜீவன்ராம்
13.8.1975  - ஜெகஜீவன்ராம்
25.8.1975 - தாழ்த்தப்பட்ட சமுதாயப் பெண்கள் நலக் கமிட்டி
13.10.1975 - காந்தீயப் பேச்சில் காரியம் நடக்கவில்லை
25.11.1975 - சுடுகாட்டிலும் ஜாதி இழிவா?
9.12.1975 - எப்போதும் விழிப்பு தேவை
9.1.1976 - தாழ்த்தப்பட்டோர் குழுவின் சரியான பரிந்துரை
10.3.1976 - தாழ்த்தப்பட்டோர் சங்கராச்சாரி ஆக முடியுமா?
13.3.1976 - தீண்டாமையும் வரதட்சணையும்
17.3.1976 - கார்த்திகேயன் கமிட்டியின் சாரமான அறிக்கை
1.4.1976 - ஜாதியை ஒழித்துக் கட்டுங்கள், அதன் பின் பாருங்கள்
13.4.1976 - கல்லறையிலும் ஜாதிக் கொடுமை
14.4.1976 - டாக்டர் அம்பேத்கர் வாழ்க!
12.6.1976 - ஜெகஜீவன்ராம் அவர்களின் அறைகூவல்
3.7.1976 - அரசுத் துறை நிறுவனங்களில் ஒதுக்கீடு தேவை
27.2.1976 - ஆந்திர முதல்வரின் அருமையான கருத்து
3.9.1976 - தாழ்த்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு
2.10.1976 - ஜெகஜீவன்ராம் ஜாதி ஒழிப்புக் குரல்
15.11.1976 -  தீண்டாமையை ஒழிக்க ஒரு சட்டம்
16.11.1976 - தீண்டாமையை ஒழிக்க ஒரு சட்டம்
2.2.1977 - தீண்டாமை ஒழிப்புச் சட்டம் தீண்டுகிறது
5.4.1977 - ஜெகஜீவன்ராம்
15.6.1977 - ஜெகஜீவன்ராம் படம் பிடிக்கிறார்.
7.7.1977 - தகுதி - திறமை கூப்பாடு
8.10.1977 - தீண்டாமை ஒழிப்பு சர்க்கஸ் வித்தையா?
6.12.1977 - இன்று அம்பேத்கர் நினைவுநாள்
25.1.1978 - தீண்டாமை ஒழிப்பு வார விழாதானா?
13.2.1978 - இந்திராவை நோக்கி ஜெகஜீவன்ராம்
16.2.1978 - ஜெகஜீவன்ராம் மீது பார்ப்பனர் பாய்ச்சல்
4.4.1978 - இராணுவத்திலும் ஜாதிப் பெயர்கள்
21.7.1978 - பூரி சங்கராச்சாரியும் தீண்டாமையும்
28.7.1978 - வெட்கித் தலைகுனியும் விழுப்புரம் சம்பவம்
3.10.1978 - ஜாதி ஒழிப்பில் இரட்டை வேடமா?
8.1.1979 - வகுப்புவாதமா?
5.2.1979 - தீண்டாமை ஒழிப்பில் இரட்டை வேடம் ஏன்?
16.2.1979 - வகுப்புகளும் ஒற்றுமையும்
7.12.1979 - டாக்டர் அம்பேத்கர்
12.2.1980 - ஜெகஜீவன்ராமின் வேதனைக்குரல்
13.3.1980 - தாழ்த்தப்பட்டோர் நலக்குழு அறிக்கை
14.3.1980 - ஜாதி ஒழிப்பிற்கு மக்கள் இயக்கம்
25.3.1980 - பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு இடைஞ்சல்
7.5.1980 - தீண்டாமைக்குப் பச்சைக் கொடி
2.6.1980 - ஒரு சங்கராச்சாரியின் குரங்குப் பிடிவாதம்
21.10.1980 - இடஒதுக்கீடுகள் பாபு ஜெகஜீவன்ராம்

இப்படி எண்ணற்றவைகளை எழுதியும், எடுத்துச் சொல்லியும் வருவதோடு கடமையாற்ற வேண்டிய காலத்தில் கடமையைச் செய்தும் வருகிறது நமது திராவிடர் கழகம்.

22.3.1981 அன்று பார்ப்பனர்கள் முற்படுத்தப்பட்டோரில் பாதிக்கப் பட்டோர் என்கிற பெயரால் குஜராத் பிரச்சினைக்காகப் பேரணி நடத்த இருந்தனர். தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் முன்னேறிய ஜாதிகளுக்கும் நடக்கும் அந்தப் போராட்டத்தில் தாழ்த்தப்பட்டோர் நலனைப் பேணும் கழகம் உடனடியாக எதிர்ப்பு ஊர்வலத்திற்கு ஏற்பாடு செய்தது. கழகக் காவலர் தடையை மீறுவோம் என்று குரல் கொடுத்தார். பேரணி நிறுத்தப்பட்டது. வெற்றி வீரமணிக்கா? என எண்ணுபவர்களால் நன்றி கூறுவது கூட நடக்காத காரியம்.

தந்தை பெரியார் அவர்களின் உடல் மறைவிற்குப் பிறகு அவர்தம் உயிரனைய கொள்கைகளை ஊர்தோறும் பரப்பி உலகம் தழுவிய அளவில் சிந்திக்கத் தூண்டியிருக்கிற திராவிடர் கழகத்தின் பொதுச்செயலர் தமிழர் தளபதி மானமிகு வீரமணி அவர்கள் தாழ்த்தப்பட்டவர்கள் பாதிக்கப் படுகிறபோது, தானே முந்திக் கொண்டு பரிகாரம் தேடுவதும், தாழ்த்தப் பட்டவர்களின் நலனில் அக்கறை கொண்டு செயல்படுவதும் நாடறிந்த உண்மையாகும்.

என்றாலும் எடுத்துக்காட்டுகள் சிலவற்றை இவண் எழுதிக்காட்டுவது  ஏற்புடையதுதானே! அதுவும் இந்தியன் எக்ஸ்பிரஸ் ஏடு ஜனவரி முதல் வாரத்தில் வழங்கிய குறிப்புகளை வைத்து விடுதலை 12.1.1982 அன்று வெளியிட்ட செய்தி இதோ!

நக்சலைட் இயக்கத்தில் பலி கடாவாவது தாழ்த்தப்பட்டவர்களே!
பார்ப்பனர்கள் களத்துக்கு வராமல் சூழ்ச்சி! இரண்டு ஆண்டுகளில் துப்பாக்கிக் குண்டுக்குப் பலியாகி இறந்த 19 பேரில் 8 பேர் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்தவர்கள். ஒருவர் தாழ்த்தப்பட்ட மலைவாழ் வகுப்பைச் சார்ந்தவர். மற்றவர்கள் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்தவர்கள்!

இப்படி கழகம் தாழ்த்தப்பட்டோர் நலனில் ஈடுபாடு கொண்ட காரணத்தினால்தான் சிறுபான்மைக்கான கமிஷனின் தலைவர் என்.ஆர்.நாயக் திருவனந்தபுரத்தில் கூறிய செய்தி விடுதலை ஏட்டில் 15.1.1982 அன்று வெளியிடப்பட்டது.

தாழ்த்தப்பட்டோர், எளிய மக்கள், மற்றும் மலை வாழ்வோர் மேம்பட்ட நிலையில் இருப்பது தென் மாநிலங்களில்தான்.
தாழ்த்தப்பட்ட மாணவர்கள் உதவித் தொகை பெற 90 சதவிகிதம் வருகை தரவேண்டும் என்ற விதியை மாற்றக் கோரி கவர்னரிடம் பொதுச் செயலாளர் வீரமணி அவர்கள் மனு கொடுத்தார்கள், பிறகு விதி மாற்றப்பட்டது - விடுதலை 28.1.1981

திருச்சி மாவட்டம் தளவாய்புரத்தில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த அஞ்சல்துறை அதிகாரி ஒருவரை பதவி ஏற்கவிடாமல் பார்ப் பனர்கள், ஜாதி வெறியர்கள் எதிர்ப்புத் தெரிவித்ததைத் தொடர்ந்து கழகப் பொதுச்செயலாளர் முதல்வருக்கு, மாவட்ட ஆட்சித் தலைவருக்குத் தந்தி கொடுத்து உடன் நடவடிக்கைகளைத் துவங்க வற்புறுத்தினார். மாவட்ட ஆட்சித் தலைவர் பொதுச் செயலாளரிடம் தொடர்புகொண்டு உடன் நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

மேலும், சர்வீஸ் கமிஷன் வெளியிட்ட கிராம அதிகாரிகள் பதவிக்கான விண்ணப்பம் கோரும் விளம்பரத்தில் 32 சதவீதம் திறந்த போட்டியை பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்டவர் அல்லாத மற்றவர்களுக்கான போட்டி என்று தவறாக விளம்பரம் செய்ததை கழகப் பொதுச்செயலாளர் சுட்டிக் காட்டியதைத் தொடர்ந்து சர்வீஸ் கமிஷன் உடன் திருத்தம் வெளியிட்டது.

இந்து தலையங்கத்திற்காக விடுதலை தலையங்கத்தில் தளபதி எழுதியதைப் படியுங்கள்.

ஒரு குறிப்பிட்ட ஜாதியில் பிறந்த விபத்து காரணமாகத் தானே கோடானுகோடி தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் படிக்கக்கூட அல்ல - தெருவில் நடக்க, தண்ணீர் குடிக்கக்கூட உரிமை அற்றவர்கள் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டனரே; அது குறித்துப் பார்ப்பனர்கள் என்றாவது, ஜாதி ஒழியவேண்டும் என்று கூறியதுண்டா?

1981ஆம் ஆண்டு திருச்சியில் நடைபெற்ற மத்திய செயற்குழு தீர்மானம்:

தீர்மானம் 11 : 1.3.1981 முதல் 15.3.1981 முடிய இருவாரங்கள் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் உரிமைக் காப்பு நாளை நடத்தி மத்திய அரசு குறிப்பாக இந்தியப் பிரதமர், உள்துறை அமைச்சருக்கும் தீர்மானம் அனுப்புவது, மாவட்டத் தலைநகரங்களில் பேரணி நடத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

தீர்மானம் - 12: அரசு குறிப்புகளில் இனி அரிஜன் என்ற சொல்லுக்குப் பதிலாக ஆதி திராவிடர் என்றே குறிப்பிடவேண்டும் என்று ஆணை பிறப்பிக்கப்படவேண்டும்.

திராவிடர் கழகத்தின் முக்கிய குழுவாக விளங்குகின்ற செயற்குழுவின் தீர்மானங்கள் கழகத்தின் செயல்முறைகளைத் தெளிவாகக் காட்டுகிறது.

இதே நேரத்தில் தமிழகப் பார்ப்பனர்கள் தாழ்த்தப்பட்டோர் இடஒதுக்கீட்டிற்கு பகிரங்க எதிர்ப்பு - குஜராத் கலவரத்தை ஆதரித்துத் தீர்மானம் போடுகிறார்கள்.                             - விடுதலை 12.2.1981

(நூல் - தந்தை பெரியாரும்  தாழ்த்தப்பட்டோரும்! ஆசிரியர் தஞ்சை ஆடலரசன்)

Comments

Popular posts from this blog

தந்தை பெரியாரும், தாழ்த்தப்பட்டோரும் - 1

தந்தை பெரியாரும் தாழ்த்தப்பட்டோரும் - 9

ஜாதியை உருவாக்கியவர்கள் ஆரியர்களா? வடுகர்களா?