தந்தை பெரியாரும் தாழ்த்தப்பட்டோரும் - 5



குஜராத்தும் தமிழ்நாடும்


உடனே விடுதலை தலையங்கம் தீட்டுகிறது 14.2.1981 அன்று:

குஜராத்தும் தமிழ்நாடும்

மகன் செத்தாலும் பரவாயில்லை, மருமகள் தாலியறுக்க வேண்டும் என்று சொல்வதுபோல் தாழ்த்தப்பட்டவர்களுக்குக் கிடைக்கக்கூடாது என்று போராடினால் இதுதான் சுதந்திர நாடா? என்று மானமுள்ள எவரும் கேட்கத்தான் செய்வார்கள்.

சைதை கூட்டத்தில் பேசிய தமிழர் தளபதி அவர்கள், தாழ்த்தப் பட்டோருக்கு எதிரான குஜராத் பார்ப்பனக் கலவரத்தை எதிர்த்து சென்னையில் கண்டனப் பேரணி நடத்தப்படும் என்ற அறிவிப்பை ஆரவாரம் கையொலிக்கிடையே அறிவிக்கிறார்.

அத்தோடு முடியவில்லை; நீண்ட அறிக்கையும் விடுகிறார். அதில், ஏதாவது ஒரு ரயில் விபத்து ஏற்பட்டால் உடனே தாழ்த்தப்பட்டவர்களை, மலைவாழ் மக்களை குறை கூறிவிடுவது ஒரு பாஷனாகி விட்டது என்று கூறி விசாரணையில் அதற்கு எவ்வித முகாந்திரமும் இல்லை என்று குறிப்பிட்டாரே பாபு ஜெகஜீவன்ராம் என்பதையும் சுட்டிக்காட்டுகிறார்.

தாழ்த்தப்பட்டவர்கள் பற்றிய செய்திகளை முந்திக் கொண்டு வெளி யிடுவதும் எவரும் வெளியிடாத செய்திகளை சேகரித்து வெளியிடுவதும் விடுதலை ஏடு ஒன்றுதான் என்பதை எவரும் மறுக்கமுடியாது. சிலவற்றைத் தருகிறோம்.

குஜராத் தாழ்த்தப்பட்டோர் மீதான அடக்குமுறை, புகார் செய்த இந்திரா காங்கிரஸ் உறுப்பினர்மீது பலவந்தம், நாடாளுமன்றம் அமளி, சபை ஒத்தி வைக்கப்பட்டது - விடுதலை 17.2.1981

நேரில் சென்று சேகரித்த தகவல்கள்:

குஜராத்தில் நடப்பதென்ன?

வி.டி.ராஜசேகர் ஷெட்டி அறிக்கை.

தாழ்த்தப்பட்டோர் இடஒதுக்கீட்டுக்கு எதிராக துவக்கப்பட்ட கலவரம் ஜாதிப் போராட்டமாகிவிட்டது. ஆதிதிராவிடர் மீது ஆர்.எஸ்.எஸ்.வெறித்தாக்கு; பேரணி சேர இரா.எழில்மலை அழைப்பு
யார்? எவர்? என்று பாராமல் தாழ்த்தப்பட்டவர்கள் நலன் ஒன்றே குறிக் கோளாகக் கொண்டு செயல்படுகிற பொதுச்செயலாளர் தாழ்த்தப்பட்டவர் களுக்கு அதிக ஒதுக்கீடு செய்ய வேண்டி அறிக்கை விட்டதை கீழே தருகிறோம்.

தாழ்த்தப்பட்டோருக்கு அதிக ஒதுக்கீட்டை விரைந்து செய்க!
தமிழக அரசு ஆணைப்படி தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 18 சதவிகிதத்தை உயர்த்துவதுபற்றி அரசு பரிசீலனை செய்து வருகிறது என்று தமிழக மேலவையில் கூறியிருப்பதை நாம் மனமாரப் பாராட்டி வரவேற்கிறோம். மக்கள் தொகையில் 22 முதல் 25 சதவிகிதம் உள்ள தாழ்த்தப்பட்ட சகோதரர்களுக்கு அதுவும் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக அழுத்தி ஒடுக்கி வைக்கப்பட்டவர்களுக்கு இப்படி அதிக ஒதுக்கீடு தருவது மிக மிக அவசரமும் அவசியமானதுமாகும்.

50 சதவிகிதமாக பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு ஒதுக்கப் பட்டபோதே நாம் வற்புறுத்தியதுடன் அதற்குப் பிறகு நடைபெற்ற மாநாடுகள், மத்திய கமிட்டிகள் இவைகளிலும் தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம்.

தமிழக அரசு முதலமைச்சர் இதில் துணிவுடன் செயலாற்ற வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம். இந்த முடிவைக் காலந்தாழ்த்தாது அறிவிக்கவேண்டுமென முதல்வரைக் கேட்டுக்கொள்கிறோம் - கி.வீரமணி, பொதுச்செயலாளர், விடுதலை, 2.3.1981
 
இங்கு மட்டுமல்ல, வடபுலத்திலிருந்து யார் குரல் கொடுத்தாலும் உடனே ஆதரவு கொடுத்து உதவுவது திராவிடர் கழகத்தின் வரலாறு என்பதற்கு இதோ ஓர் எடுத்துக்காட்டு:

பாபு ஜெகஜீவன்ராம் அவர்களுக்கு கழகப் பொதுச்செயலாளர் இன்று தந்தி ஒன்றை அனுப்பினார். அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: இடஒதுக்கீடுபற்றி நீங்கள் ஆற்றிய லக்னோ உரையை முழுமனதுடன் நாங்கள் வரவேற்கிறோம். பார்ப்பன நாயகத்தை எதிர்த்துப் போராட உரிய நேரத்தில் துணிவுடன் தாங்கள் செய்துள்ள பிரகடனத்தைப் பாராட்டுகிறோம். அதை எதிர்ப்பதில் நாம் ஒன்றுபட்டு நிற்போம்.
கி.வீரமணி, பொதுச்செயலாளர், விடுதலை, 16.3.1981

இன்றைக்கும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற குஜராத் இடஒதுக்கீடு போராட்டம் 1981ஆம் ஆண்டு தொடங்கியபோதே தமிழர் தளபதி தமிழ் நாட்டையும் குஜராத் ஆக்கத் திட்டமா? என்று அறிக்கை வெளியிட்டார்.
22.3.1981ஆம் தேதி சென்னைப் பேரணிக்கு எதிர்ப்பு அணியை கட்சி வேறுபாடின்றி அனைத்து அமைப்புகளைச் சார்ந்த தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்தவர்களும் பல்லாயிரக்கணக்கில் கலந்துகொள்ளுமாறு கழகம் முடிவெடுத்திருக்கிறது.
தளபதி அறிக்கை:  விடுதலை 19.3.1981

கண்டனக் கூட்டம் ஒன்றும் 21.3.1981 அன்று தியாகராயர் நகர் பெரியார் மைதானத்தில் நடைபெற்றது. அத்தோடு அமைதி கொண்டாரா? இல்லையே!

எச்சரிக்கை! எச்சரிக்கை!!

தாழ்த்தப்பட்டோருக்கு எதிராக நடத்தப்படும் அக்கிரமங்களுக்கு பச்சைக்கொடி காட்டி ஊக்குவித்தது முற்படுத்தப்பட்டோர் இயக்கம். 3 இடங்களுக்காக 30-க்கும் மேற்பட்ட தாழ்த்தப்பட்ட சகோதரர்கள் அங்கே பலியாகி விட்டனர்.

தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சகோதரர்களே! தமிழ்நாட்டிலும் குஜராத் உருவாக்கப்படுகிறது. எச்சரிக்கை! எச்சரிக்கை!! என அபாய அறிவிப்பைச் செய்தார்.
 
தடையை மீறுவது தவிர வேறு வழி இல்லையே!
தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களது உரிமைகளுக் காக தங்களை அழித்துக் கொள்ளும் இந்தச் சிறிய கருப்பு மெழுகுவர்த்திகள் அய்யா என்ற அறிவுச்சுடரின் ஒளியினால் கொளுத்தப்பட்டவர்கள் என்பதை எவரும் மறந்துவிடாமல் கடமையாற்றிட முன்வருவீர் என வேண்டிக்கொள்கிறோம்.
- பொதுச்செயலாளர் அறிக்கை விடுதலை - 21.3.1981  

குடந்தையில் நடைபெற்ற வகுப்புரிமை மாநாட்டில் தாழ்த்தப்பட்டோர் இடஒதுக்கீட்டை 25 சதவிகிதமாக உயர்த்த கழகத்தின் போராட்டம்.
- விடுதலை - 30.3.1981

விடுதலை ஏட்டில் அன்றாடம் தாழ்த்தப்பட்டவர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை எதிர்த்து எழுதப்பட்டவைகளைப் பாருங்கள்:

தாழ்த்தப்பட்ட மாணவர்கள் இரண்டுபேர் மதுரை விடுதியில் கொலை செய்யப்பட்டதற்கு இன்று சட்டசபையில் உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர் - விடுதலை - 3.4.1981

குஜராத் கலவரம் திட்டமிட்ட ஏற்பாடே!
தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான வழக்கில் பார்ப்பனர் சாந்திபூஷண் செய்த மிரட்டல் - விடுதலை 6.4.1981

தாழ்த்தப்பட்டோர் இனத்தை இழிவுபடுத்தும் மனுதர்மம்.
- தலையங்கம் 7.4.1981

பார்ப்பனீயம் ஒழிந்தால்தான் சமுதாய விடுதலை
ஜெகஜீவன்ராம் முழக்கம் - தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் ஒற்றுமையை வற்புறுத்தல் - விடுதலை 18.4.1981

இந்து மதமும் - அம்பேத்கரும்
இந்து மதத்தை ஒழிக்க டாக்டர் அம்பேத்கர் சொன்னதென்ன?
கட்டுரை விளக்கம் அம்பேத்கர் பட்ட அல்லல்கள்
அம்பேத்கர் வாழ்க! 91ஆவது பிறந்தநாள் தலையங்கம் - விடுதலை, 14.4.1981

தந்தை பெரியாரும் தாழ்த்தப்பட்டவர்களும்  - விடுதலை, 19.4.1981

தீண்டாமை பேசும் சங்கராச்சாரி            - விடுதலை, 29.5.1981

காஞ்சி முனிவரும், தீண்டாமையும்
கோயிலுக்குள் நுழைந்த தாழ்த்தப்பட்ட பக்தர்கள் மீது உயர்ஜாதி பக்தர்கள் கல்லெறிந்து ரகளை; அம்மன் திருவிழாவில் அமளி! 17 பேர் கைது - விடுதலை 2.7.1981
 
திருச்செந்தூர் தாலுகா தாழ்த்தப்பட்டவர்கள் இந்து மதத்திற்கு முழுக்கு - ஜாதிவெறியால் மீனாட்சிபுரங்கள் தொடர்கின்றன.
- விடுதலை - 3.7.1981

தாழ்த்தப்பட்டவர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் எந்த மூலையில் நிகழ்ந்தாலும் அதனை உடனே வெளி உலகிற்குக் காட்டுவதும் அதனைக் களைவதற்கு ஆவண செய்வதும் கழகத்தின் பணியாகும்.

இதோ எடுத்துக்காட்டுகள்: தாழ்த்தப்பட்டோருக்கு இழைக்கப்படும் அநீதிகள்: பஞ்சப்பட்டி திராவிடர் கழகம் கடும் எச்சரிக்கை!

தாழ்த்தப்பட்டவர்களைக் கேவலப்படுத்துகின்ற முறையில் ஓட்டல்களிலும் பொது இடங்களிலும் புறக்கணிப்பது மனித உரிமையைப் பாதிப்பதாகும். இச்செயலை கழக சார்பில் கடுமையாக எதிர்க்கிறோம். நீடிக்கக் கூடாதென எச்சரிக்கிறோம்.             - விடுதலை - 16.3.1981

செங்கை மாவட்டத்தில் ஓர் அய்யரின் தூண்டுதலில் தாழ்த்தப் பட்டவர்கள் படும்பாடு. எட்டாம் தேதி வளத்தூர் கிராமத்தில் மாபெரும் பேரணி. காஞ்சிபுரம் தாலுகா புரிசை கிராமத்தில் தாழ்த்தப்பட்ட சமுதாய மக்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை களைவதற்கு பேரணியாக புரிசை கிராமத்திற்குள் சென்று கிணற்றில் இறங்கி தண்ணீர் எடுப்போம். காலில் செருப்பணிந்து வீரநடை நடப்போம். சைக்கிளில் ஏறி உரிமைக்குரல் எழுப்பிச் செல்வோம்.                                       - விடுதலை 7.6.1981

தளபதியே பேசுகிறார் கேளுங்கள்!

மதமாற்றமும் தாழ்த்தப்பட்டோரும்!

தாழ்த்தப்பட்டோர் ஜாதிக்கொடுமைகள் தாங்க இயலாமல் தங்களது சுயமரியாதையைக் காப்பாற்றிக்கொள்ள இந்து மதத்திலிருந்து வெளியேறி முஸ்லிம்கள் ஆனார்கள் என்ற செய்தி இந்து மதவாதிகளுக்குப் புதிய செய்தி அல்ல என்றாலும்...

மதமாற்றம்பற்றி இன்று பதறித்துடிக்கும் இந்த மாமேதைகள் சங்கராச்சாரியிலிருந்து சாதாரண இந்துமத சனாதனி வரையில் ஜாதியின் கொடுமைக்கு என்ன பரிகாரம் தேட முனைந்தனர்?

சுடுகாட்டிலும்கூட பார்ப்பான் சுடுகாடு, பறையன் சுடுகாடு உள்ளதே! அதை மாற்றினார்களா? சுடுகாட்டிற்கு தங்களது இறந்த மக்களை எடுத்துச் செல்லும்போது தாழ்த்தப்பட்ட சகோதரர்களுக்குச் சரியான பாதைகூட தர மறுக்கிறார்களே உயர்ஜாதி வெறியர்கள்! அதைத் தடுக்க  - மாற்ற இப்போது கசிந்துருகி கண்ணீர் விடும் இந்தக் கண்ணியவான்கள் தங்களது சுண்டுவிரலையாவது அசைத்ததுண்டா?
தாழ்த்தப்பட்டோர் போஸ்ட் மாஸ்டரானால் அவர் கிராமத்திற்குள் அலுவல் பார்க்க வீடு கொடுக்க மாட்டோம்; ஊருக்கு வெளியே வேண்டுமானாலும், அந்த அஞ்சல்நிலையம் இருக்கட்டும் என்று கூறும் ஜாதி வெறித்தனத்தை இன்று இந்துமத அபிமானிகள் கண்டித்து ஒரு வார்த்தை கூறியிருப்பார்களா?
- பொதுச்செயலாளர் கி.வீரமணி விடுதலை 19.5.1981

எத்தனையோ விடுதலை தலையங்கங்கள் தாழ்த்தப்பட்டோருக்காக எழுதப்பட்டிருக்கின்றன. அவைகளிலே சில:

இழிவு ஒழிப்புப் பெரும்படையே செல்க! வெல்க!!
தாழ்த்தப்பட்டவன் உயிரோடு எரிக்கப்படுவதைவிட ஒரு பார்ப்பானின் பூணூல் அறுக்கப்பட்டால் மிகப் பெரிய பிரளயங்கள் உருவாக்கப்படுகிறது என்றால் அது இந்த மனுதர்ம அடிப்படையில்தான் - தலையங்கம் விடுதலை 15.5.1981
 
(நூல் - தந்தை பெரியாரும்  தாழ்த்தப்பட்டோரும்! ஆசிரியர் தஞ்சை ஆடலரசன்)

Comments

Popular posts from this blog

தந்தை பெரியாரும், தாழ்த்தப்பட்டோரும் - 1

தந்தை பெரியாரும் தாழ்த்தப்பட்டோரும் - 9

ஜாதியை உருவாக்கியவர்கள் ஆரியர்களா? வடுகர்களா?