தந்தை பெரியாரும் தாழ்த்தப்பட்டோரும் - 8



படித்துவிட்டு வேலை இன்றித் தவிக்கும் நம் இன மாணவ மாணவியர்! மண்டல் கமிஷன் கடும் உழைப்பில் சேகரித்த புள்ளி விவரங்கள்!

இளைஞர்களே எழுச்சி அடைவீராக!

தன்னாட்சி நிறுவனங்கள் மற்றும் துணை நிலை அலுவலகங்களில்  தாழ்த்தப்பட்ட, மலைவாழ். பிற்படுத்தப்பட்டவர்கள் மக்கள் எண்ணிக்கை
மூன்று நான்காம்  நிலை அலுவலர்  எல்லா நிலை அலுவலர்
.எண்            அமைச்சகம், துறை       மொத்தம்    தாழ்த்தப்பட்ட
மலைவாழ்   பிற்படுத்தப்பட்டோர்     மொத்தம்    தாழ்த்தப்பட்ட
மலைவாழ்   பிற்படுத்தப்பட்டோர்

1.            கணக்காய்வு மற்றும்
பொது வருவாய்  7,534 2,236  831     57,958            12,596            4,963
2.            விவசாயம், நீர்ப்பாசனம்         7,816  2,399  1,423  20,876            4,356  2,369
3.            அணுமின் சக்தி    1,581  353     88        2,467  359     110
4.            மய்ய விஜிலன்ஸ் குழு           34        17        15        149     31        44
5.            வணிக, நுகர்பொருள் கூட்டுறவு     1,697  339     38        5,614  914     119
6.            செய்தித் தொடர்பு           616     238     134     3,383  794     306
7.            கல்வி சமூகநலம்           14,676            4,107  1,838  37,992            5,789  3,427
8.            எலக்ட்ரானிக்       15        6          -           253     32        6
9.            தேர்தல் அலுவலகம்     54        21        -           214     42       
10.         எனர்ஜி         173     33   12        1,470  130     42
11.          வெளியுறவுத்துறை       187     73        37        1,076  219     78
12.          நிதித்துறை            22,858            5,243  3,805  87,559            15,316            7,906
13.         சுகாதாரம்குடும்ப நலம்         16,693     3,720  720     34,063            5,074  1,265
14.          உள்துறை   19,538            7,723  2,650  2,13,975         42,464            23,356 15.     தொழில் துறை  1,20,982         15,862            36,188            1,77,035         32,162            51,547
16.          செய்தி மற்றும் விளம்பரம்     3,481  1,346  491     11,920            2,916  1,361
17.          தொழிலாளர்         4,553  1,345  691     16,795            2,922  1,822
18.          பெட்ரோலியம்
   மற்றும் கெமிகல்ஸ்      653     150     71        3,297  306     156
19.          தாழ்த்தப்பட்ட மலைவாழ்
   மக்கள் கமிஷன்  5          5          -           31        7          - 20.    சைன்ஸ் மற்றும் டெக்னாலஜி   11,445            3,250  1,928  40,640            6,569  4,067
21.          கப்பல் போக்குவரத்து   56,484            10,126            12,925            87,871            13,119   19,548
22.          விண்வெளி           1,336  363     183     9,583  671     1,131
23.          இரும்பு மற்றும் சுரங்கம்         5,375  783     455     17,380            2,203  962
24.          சப்ளை, மறுவாழ்வு       4,091  991     442     15,202            2,461  1028
25.          சுற்றுலா, விமானப்
   போக்குவரத்து     1,585  531     224     7,274  1,444  704
26.          மத்திய தேர்வாணைக்குழு     256     113     32        1,151  259     43
27.          பணித்துறை மற்றும்
   வீட்டுவசதி            19,230            5,745  2,375  52,392            10,793            4,650
   மொத்தம்    3,22,948         67,118            67,786            9,07,610         1,63,948         1,31,012 மண்டல் குழு அறிக்கையினின்று எடுக்கப்பட்டது

மய்ய அரசில் தாழ்த்தப்பட்ட, மலைவாழ், பிற்படுத்தப்பட்ட மக்களின் பிரதிநிதித்துவம்
முதல்  நிலை அலுவலர்            இரண்டாம்  நிலை அலுவலர்
.எண்            அமைச்சகம், துறை       மொத்தம்    தாழ்த்தப்பட்ட
மலைவாழ்   பிற்படுத்தப்பட்டோர்     மொத்தம்    தாழ்த்தப்பட்ட
மலைவாழ்   பிற்படுத்தப்பட்டோர்
 
1.            குடியரசுத் தலைவர் செயலகம்        49        4          -           163     24        -
2.            துணைக் குடியரசுத்
   தலைவர் செயலகம்      7          -           -           16        1          1
3.            தலைமை அமைச்சர்
   அலுவலகம்          35        2          1          117     13        4
4.            அமைச்சர்கள் செயலகம்        20        1          1          115     19        13
5.            விவசாயமும், நீர்ப்பாசனமும்          261     15        13        220     15        3
6.            அணுமின் துறை  34        -           -           82        1          -
7.            வணிகம், நுகர்பொருள்,
   கூட்டுறவுத்துறை           61        11        -           211     32        -
8.            செய்தி தொடர்பு இணைப்பகம்         52        5          -           130     6          -
9.            பாதுகாப்புத்துறை           1,379  48        9          7,752  803     187
10.          கல்வி மற்றும் சமூகநலம்      259     17        4          851     96        23
11.          அணுவியக்கத்துறை     92        1          2          198     46        5
12.          எனர்ஜி         641     39        20        2,332  253     132
13.          வெளியுறவுத்துறை       649     60        1          1,889  162     5
14.          நிதித்துறை            1,008  66        1          2,724  306     11
15.          நலத்துறை, குடும்ப நலத்துறை       240     19        -           1,506  163     -
16. உள்துறை           409     19        13        1,301  140     27
17.          தொழில்துறை     169     16        3          510     42        8 18.   செய்தி மற்றும் விளம்பரம்   2,506  212     124     9,416  1,795  740
19.          சட்டம், நீதி மற்றும் கம்பெனி           
   1. சட்டம்      143     18        5          725     112     25
   2. சட்டத்துறை     112     14        2          263     41        7
   3. கம்பெனி 247     23        6          1,114  151     53
20.          தொழிலாளர் துறை       74        4          -           274     20        1
21.          சட்டமன்றத் துறை        18        1          -           68        11        1
22.          பெட்ரோலியம் மற்றும்
   கெமிகல்ஸ்           121     9          -           97        9          -
23.          திட்டம்         1,262  137     72        4,657  614     234
24.          அறிவியல் மற்றும்
   டெக்னாலஜி         104     5          1          175     21        9
25.          கப்பல் மற்றும் போக்குவரத்து          103     6          1          426     66        3
26.          விண்வெளித்துறை       19        -           -           49        3          7
27.          இரும்பு மற்றும் சுரங்கத்துறை         128     11        3          370     31        -
28.          சப்ளை மற்றும் மறுவாழ்வு   103     6          1          426     66        3
29.          சுற்றுலா மற்றும்
   விமான போக்குவரத்து            1,187  61        20        4,820  845     221
30.          பணித்துறை, வீட்டுவசதி        218     10        -           807     78        9 மொத்தம் 11,707   840     303     43,804            5,985  1,732

மய்ய அரசில் தாழ்த்தப்பட்ட, மலைவாழ், பிற்படுத்தப்பட்ட மக்களின் பிரதிநிதித்துவம்
மூன்று,  நான்காம்  நிலை அலுவலர்            எல்லா  நிலை அலுவலர்களும்
.எண்            அமைச்சகம், துறை       மொத்தம்    தாழ்த்தப்பட்ட
மலைவாழ்   பிற்படுத்தப்பட்டோர்     மொத்தம்    தாழ்த்தப்பட்ட
மலைவாழ்   பிற்படுத்தப்
பட்டோர்

1.            குடியரசுத் தலைவர்
   செயலகம்  96        19        -           307     47        -           2.         துணைக் குடியரசுத்
   தலைவர் செயலகம்      11        4          -           34        5          1
3.            தலைமை அமைச்சர்
   அலுவலகம்          61        19        2          213     34        7
4.            அமைச்சர் செயலகம்    61        18        8          196     38        22
5.            விவசாயமும், நீர்ப்பாசனமும்          73        19        3          554     49        19
6.            அணுமின் துறை  214     42        4          330     43        4
7.            வணிகம், நுகர்பொருள்,
   கூட்டுறவுத்துறை           63        20        3          335     63        -
8.            செய்தித் தொடர்பு இணைப்பகம்      43        7          1          225     18        1
9.            பாதுகாப்புத்துறை           2,127  604     131     11,258            1,455  327
10.          கல்வி மற்றும் சமூகநலம்      278     76        12        1,388  189     39
11.          அணுவியக்கத்துறை     55        29        2          345     76        9
12.          எனர்ஜி         1,449  335     276     4,422  627     428
13.          வெளியுறவுத்துறை       460     73        10        2,998  295     16
14.          நிதித்துறை            821     202     13        4,553  574     25
15.          நலத்துறை, குடும்பநலத்துறை        288     72        -           2,034  254     -
16. உள்துறை           1,164  272     33        2,874  431     73
17.          தொழில்துறை     252     103     11        931     161     22
18.          செய்தி மற்றும் விளம்பரம்     4,583  1,653  483     16,505            3,660  1,347
19.          சட்டம், நீதி மற்றும் கம்பெனி           
   1. சட்டம்      319     96        30        1,187  226     60
   2. சட்டத்துறை     104     27        15        479     82        24
   3. கம்பெனி 320     80        23        1,681  254     82
20.          தொழிலாளர் துறை       101     18        1          449     42        2
21.          சட்டமன்றத் துறை        26        8          1          112     20        2
22.          பெட்ரோலியம் மற்றும்
   கெமிகல்ஸ்           36        16        -           254     34        -
23.          திட்டம்         998     226     52        6,917  977     358
24.          அறிவியல் மற்றும்
   டெக்னாலஜி         55        28        7          331     54        17
25.          கப்பல் மற்றும் போக்குவரத்து          143     43        1          672     115     5
26.          விண்வெளித்துறை       20        10        3          88        13        10
27.          இரும்பு மற்றும் சுரங்கத்துறை         131     49        4          629     91        7
28.          சப்ளை மற்றும் மறுவாழ்வு   143     43        1          672     115     5
29.          சுற்றுலா மற்றும்
   விமான போக்குவரத்து            3,178  1,275  290     9,185  2,181  541
30.          பணித்துறை, வீட்டுவசதி        156     32        80        1,181  120     89 மொத்தம்   17,829            5,518  1,500  73,339            12,343            3,542

பொது அரசுடைமை நிறுவனத்தில் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, மலைவாழ் மக்கள் எண்ணிக்கை
முதல்  நிலை அலுவலர்கள்     இரண்டாம் நிலை அலுவலர்கள்
.எண்            அமைச்சகம், துறை       மொத்தம்    தாழ்த்தப்பட்ட
மலைவாழ்   பிற்படுத்தப்பட்டோர்     மொத்தம்    தாழ்த்தப்பட்ட
மலைவாழ்   பிற்படுத்தப்பட்டோர்

1.            விவசாயம், நீர்ப்பாசனம்         1,146  77        66        4,258  521     428 2. அணுமின்சக்தி   58        2          -           107     -           1
3.            வணிகம், நுகர்பொருள்,
   கூட்டுறவு   1,724  95        66        4,375  536     558 4. செய்தித் தொடர்பு           4,474  260     373   12,143            2,223  2,333
5.            கல்வி, சமூகநலம்          707     12        125     1,297  110     325
6.            எனர்ஜி         5,070  178     41        13,086            677     920
7.            பெட்ரோலியம், கெமிகல்ஸ்  16,217            785     323     41,464            4,307  3,204
8.            தொழில்      2,041  161     88        6,054  781     551
9.            நலத்துறை, குடும்பநலம்        35        2          -           480     72        -
10.          சைன்ஸ், டெக்னாலஜி 148     3          2          509     82        30 11. கப்பல் போக்குவரத்து        3,044  142     116     11,536            1,365  1,150
12.          இரும்பு, சுரங்கம் 37,817            1,297  2,451  25,014            54,843            26,390
13.          சுற்றுலா, விமான
   போக்குவரத்து     7,923  605     59        18,995            2,801  341
14.          பணித்துறை வீட்டுவசதி         530     33        9          1,317  248     11
   மொத்தம்    80,934            3,652  3,719  1,40,635         68,566            36,242
பொது அரசுடைமை நிறுவனத்தில் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, மலைவாழ் மக்கள் எண்ணிக்கை
முதல்  நிலை அலுவலர்கள்     இரண்டாம் நிலை அலுவலர்கள்
.எண்            அமைச்சகம், துறை       மொத்தம்    தாழ்த்தப்பட்ட
மலைவாழ்   பிற்படுத்தப்பட்டோர்     மொத்தம்    தாழ்த்தப்பட்ட
மலைவாழ்   பிற்படுத்தப்பட்டோர்

1.            விவசாயம், நீர்ப்பாசனம்         1,146  77        66        4,258  521     428 2. அணுமின்சக்தி   58        2          -           107     -           1
3.            வணிகம், நுகர்பொருள்,
   கூட்டுறவு   1,724  95        66        4,375  536     558 4. செய்தித் தொடர்பு           4,474  260     373   12,143            2,223  2,333
5.            கல்வி, சமூகநலம்          707     12        125     1,297  110     325
6.            எனர்ஜி         5,070  178     41        13,086            677     920
7.            பெட்ரோலியம், கெமிகல்ஸ்  16,217            785     323     41,464            4,307  3,204
8.            தொழில்      2,041  161     88        6,054  781     551
9.            நலத்துறை, குடும்பநலம்        35        2          -           480     72        -
10.          சைன்ஸ், டெக்னாலஜி 148     3          2          509     82        30 11. கப்பல் போக்குவரத்து        3,044  142     116     11,536            1,365  1,150
12.          இரும்பு, சுரங்கம் 37,817            1,297  2,451  25,014            54,843            26,390
13.          சுற்றுலா, விமான
   போக்குவரத்து     7,923  605     59        18,995            2,801  341
14.          பணித்துறை வீட்டுவசதி         530     33        9          1,317  248     11
   மொத்தம்    80,934            3,652  3,719  1,40,635         68,566            36,242
மக்கள் தொகை - 1981
தாழ்த்தப்பட்டவர்களும் மலைவாழ் மக்களும்
மாநிலம் மாவட்டம் கிராமம் நகரம்   தாழ்த்தப்பட்டோர்          மலைவாழ் மக்கள்   கூடுதல்
மக்கள் தொகை
  
தமிழ்நாடு      மொத்தம்    8,881,295      520,226          9,401,521
   கிராமம்        7,090,664      469,810          7,560,474
   நகரம்            1,790,631  50,416    1,841,047
சென்னை       மொத்தம்  437,916   5,373  443,289
செங்கல்         மொத்தம் 947,789 46,050  993,839
பட்டு    கிராமம் 732,890 36,874 769,764
   நகரம் 214,899   9,176 224,075
தென்    மொத்தம்    1,091,353 53,775     1,145,128
ஆர்க்காடு      கிராமம்        1,011,447 51,960     1,063,107
   நகரம்   79,906   1,815    81,721
வட       மொத்தம்  877,804            93,690  971,494
ஆர்க்காடு      கிராமம்        741,758          89,557  831,315
   நகரம்            136,046   4,133  140,179
சேலம் மொத்தம்    560,267          122,444  682,711
   கிராமம்        463,298          121,193  584,491
   நகரம் 96,969   1,251   98,220
தருமபுரி         மொத்தம்    276,714          46,074 322,788
   கிராமம்        260,948          44,986 305,934
   நகரம்  15,766  1,088   16,854
ஈரோடு           மொத்தம்    338,477 15,191        353,668
   கிராமம்        297,057 14,193        311,250
   நகரம் 41,420    998  42,418
கோயம்          மொத்தம்    496,855          22,358            519,213
புத்தூர் கிராமம்   297,166     20,487 317,653
நகரம்     199,689        1,871    201,560
நீலகிரி     மொத்தம்  145,174     20,874 166,048
கிராமம் 70,889   14,433 85,322
நகரம் 74,285 6,441 80,726
தஞ்சாவூர்  மொத்தம்  943.343  6.012    949.355
கிராமம்   869,739  2,653    872,392
நகரம்  73,604  3,359  76,963
திருச்சிராப்  மொத்தம்  672,697     48,294 720,991
பள்ளி கிராமம்   583,888     44,627 628,515
நகரம்     88,809  3,667 92,476
புதுக்  மொத்தம்  191,732   1,516   193,248
கோட்டை   கிராமம்   178,907   1,217   180,124
நகரம்  12,825    299  13,124
மதுரை     மொத்தம்  695,242     13,646       708,888
கிராமம்   579,754 8,778     588,532
நகரம்     115,488 4,868     120,356

இராமநாத  மொத்தம்  555,991 6,617     562,908
புரம்   கிராமம்   483,821     4,189 488,010
நகரம்     72,170 2,428 74,898
திருநெல்   மொத்தம்  589,468     11,954 601,422
வேலி கிராமம்   467,804 8,801     476,605
நகரம்     121,664 3,153     124,817
கன்னியா   மொத்தம் 60,173 6,358 66,531
குமரி  கிராமம்   51,298 5,862 57,160
நகரம் 8,875   496  9,371

1981 ஆம் ஆண்டில் இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி மண்டல்குழு அறிக்கையிலிருந்து எடுக்கப்பட்டது.
தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்டோர், மலைவாழ் மக்களில் படித்தவர்களின் தொகை சதவிகிதத்தில் அரசு புள்ளிவிவரத் துறை வழங்கியது
மாநிலம் மாவட்டம்    படித்தவர் சதவிகிதம் பரப்பபளவு
.கிலோ.மீ  மலைவாழ் மக்கள் சதவிகிதம்   தாழ்த்தப்பட்டோர் சதவிகிதம் மொத்தம் தாழ் - மலை
சதவிகிதம்


சென்னை   68.40   130 13.36 0.16  13.52
செங்கல்பட்டு    48.00 7,903 26.21 1.27  27.48
தென்ஆர்க்காடு   36.78 10,894 25.97 1.28  27.25
வட ஆர்க்காடு   40.89 12,268 19.89 2.12  22.01
சேலம் 39.29 8,650 16.28 3.56  19.84
தருமபுரி    29.00 9,622 13.86 2.31  16.17
ஈரோடு     39.81 8,209 16.36 0.73  17.09
கோயம்புத்தூர்    53.10 7,469 16.24 0.73  16.97
நீலகிரி     56.52 2,549 23.04 3.31  26.35
தஞ்சாவூர்  50.30 8,280 23.21 0.15  23.36
திருச்சி     45.62 11,095 18.62 1.34  19.96
புதுக்கோட்டை   38.69 4,661 16.57 0.13  16.70
மதுரை     47.36 12,624 15.33 0.30  15.63
இராமநாதபுரம்    45.32 12,590 16.68 0.20  16.88
திருநெல்வேலி   52.14 11,429 16.49 0.33  16.82
கன்னியாகுமரி   63.85 1,684 4.23   0.45 4.68
மொத்தம்   46.76   1,30,057   18.35 1.07  19.42
ஆதாரம் - மக்கள் தொகை கணக்கு – 1981

விருதுநகர் தோழரின் கடிதம்

விருதுநகர்த் தோழர் ஒருவர் எழுதிய கடிதம் தனியே வெளியிடப்பட்டுள்ளது. விடுதலை ஞாயிறு மலரில் (30.6.96) சாது எழுதிய கட்டுரை அவர் கண்ணோட்டத்தில் குறைபாடு உடையதாகப் பட்டு இருக்கிறது. விருதுநகர்த் தோழர்  போல நமது உடன் பிறப்புகளான தாழ்த்தப்பட்ட தோழர்கள் திராவிடர் கழகத்தின்பால் உண்மையுடன் கூடிய கோபப் பார்வையைச் செலுத்துவதுண்டு.
உண்மையிலேயே திராவிடர் கழகம் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக மட்டும் என்றோ, பிற்படுத்தப்பட்ட மக்களுக்காகவே என்றோ தனித்துப் பிரித்துப் பாடுபடும் இயக்கமல்ல.
 
பார்ப்பன வல்லாதிக்கத்தினர் யானை அடியின்கீழ் நரம்பு மண்டலம் உட்படப் பிதுங்கிக் கிடக்கும் ஒட்டு மொத்தமான பார்ப்பனர் அல்லாதாரின் விடுதலைக்குப் புது ரத்தம் பாய்ச்சும் சமூகப் புரட்சி இயக்கமாகும். இதில் அதிக ரத்தப் போக்குக் கண்ட தாழ்த்தப்பட்ட மக்களுக்கு முன்னுரிமை, அடுத்த நிலையில் உள்ள பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு அடுத்த உரிமை என்கிற திசையில் தான் திராவிடர் கழகத்தின் பங்கும் பணியும் அமைந்திருக்கும்.
 
ஒரே ஒரு இடம் காலியாய் இருந்து அந்த இடத்தைத் தாழ்த்தப்பட்டவருக்குக் கொடுக்க வேண்டுமா, பிற்படுத்தப்பட்டவருக்குக் கொடுக்க வேண்டுமா என்று கேள்வி எழுந்தால், தாழ்த்தப்பட்டவருக்குத்தான் கொடுக்க வேண்டும் என்று எங்கள் கழகம் சொல்லும். ஒரு இடம் காலியாக இருந்து, ஒரு பிற்படுத்தப்பட்டவரும், முன்னேறிய தமிழரும் போட்டிக்கு வந்தால், அந்த ஒரு இடம் பிற்படுத்தப்பட்டவருக்கே கொடுக்கப்படவேண்டும் என்று எங்கள் கழகம் சொல்லும். ஒரு இடம் காலியாக இருந்து அந்த இடத்திற்கு ஒரு முன்னேறிய வகுப்புத் தமிழரும், பார்ப்பனரும் போட்டியிட்டால், அந்த இடம் முன்னேறிய வகுப்புத் தமிழருக்கே கொடுக்கப்பட வேண்டும் என்பதுதான் எங்கள் கழகத்தின் நிலை என்று திட்டவட்டமாகச் சொன்னவர் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் மானமிகு கி.வீரமணி (விடுதலை, 26.6.1982) அவர்கள்.

பார்ப்பனிய மேலாதிக்கத்தைக் கொண்ட இந்த சமூக அமைப்பில் வருணாசிரமம் என்கிற ஏற்பாடு, பிறவியிலேயே பேதத்தை வைத்து அடுக்கடுக்கான ஏற்றத் தாழ்வுகளை உள்ளீடாக வைத்து, சதா சண்டையிடும் பகைமை நெருப்பைப் பக்குவமாக மூட்டிவிடும் கடைந்தெடுத்த காலித்தனமாகும். இதன் ஆணிவேரை நிர்மூலமாக ஆக்காத வரை தமிழ் நெஞ்சர்கள் திராவிடர் கழகத்தின் பக்கம் துப்பாக்கியைத் திருப்புவதில் பொருள் இல்லை. ஆம்! ஆணிவேரை அழிக்கும் அடிப்படைப் பணியை தோளில் போட்டுக் கொண்டு நாளும் களத்தில் நிற்கிறது திராவிடர் கழகம்.

ஜாதியைக் கட்டிக் காப்பது கடவுளா - அதற்குக் கல்தா கொடு மதமா - அதன் மண்டையைப் பிள! சாத்திரங்களா - அதன் சல்லி வேர் உட்பட அழி! இதிகாசங்களா - அதன் இடுப்பெலும்பை முறி! அரசியல் சட்டமா வை நெருப்பை! இந்தப் பணிதானே அடிப்படைப் பணி - இதனைத் தானே தந்தை பெரியார் கண்ட திராவிடர் கழகம் நொடிதோறும் நொடிதோறும் செய்து கொண்டிருக்கிறது. இந்தப் பணிக்கு தமிழ் நெஞ்சன் பறையன்கள் அல்லவா முன்வர வேண்டும்! சாக்கடைக் குழிகள் இருக்கும் வரை கொசுக்கள் ரத்தம் உறிஞ்சுவதைத் தடுக்க முடியுமா?

ஜாதி அமைப்பு இருக்கும் வரை தாழ்த்தப்பட்டவனும், பிற்படுத்தப்பட்டவனும் கை கலப்பதை முடிவுக்குக் கொண்டு வர முடியுமா? ஏன்? தீண்டத்தகாதவன் என்று திமிர்ப்பிடித்த வைதீகம் கூறுகிறதே - அந்தத் தீண்டப்படாத மக்களிடையேகூட பள்ளன் - பறையன் என்று முண்டா தட்டிக் கொண்டு இருக்கிறோமே! இதற்கு முடிவு என்ன? பள்ளன்கள் எல்லாம் ஒரு கட்சி; பறையன்கள் எல்லாம் ஒரு கட்சி என்று உத்தி பிரித்து கோதாவுக்குள் குதிப்பதுதானா?
இதை நாம் செய்து கொண்டிருந்தால், எந்த சூழ்ச்சியோடு இந்த ஜாதி அமைப்பை ஆரியன் உருவாக்கினானோ, அது வெற்றி பெறுவதற்கு, ஊதியம் பெறாமல் நாமே உரமிட்டு, நீர்ப்பாய்ச்சி வேலியும் அமைத்துக் கொடுத்தது ஆகிவிடாதா?

பார்ப்பனர் எதிர்ப்பு, பகுத்தறிவுப் பிரச்சாரம் என்கிற கிடுக்கித் தாக்குதல் தானே இதற்கோர் சரியான பரிகாரம்! அதைத்தானே திராவிடர் கழகம் புத்திசாலித்தனமாக செய்து கொண்டிருக்கிறது! இதை அழுத்தமாகப் புரிந்துகொண்டு இருப்பதால் தானே திராவிடர் கழகம் என்ற பெயரைக் கேட்டாலே ஆரியத்துக்கு நெறிகட்டுகிறது! பைத்தியக்காரத் தனமாகவா பழனியிலே மாநாடு கூட்டி பார்ப்பான் வீரமணியை பாடை கட்டித் தூக்கிச் செல்கிறான்? தமிழ் நெஞ்சர்களே, சிந்தியுங்கள்.

1929 - செங்கற்பட்டு முதல் சுயமரியாதை மாநாடு தொடங்கி, இன்றுவரை திராவிடர் கழக மாநாட்டுத் தீர்மானங்களையெல்லாம் கொஞ்சம் அசைபோட்டுப் பாருங்கள். இந்தத் தீர்மானங்கள் எல்லாம் எவற்றின் அடிப்படையில்? தாழ்த்தப்பட்டவர்கள் மீது திராவிட கழகத்துக்கு அக்கறை இல்லை என்றால் இந்த மாநாடுகளும் முயற்சிகளும், உழைப்பும், பொருள் செலவும் எவற்றுக்காக?
 
இந்திய அரசியல் சட்டத்தில்கூட அண்ணல் அம்பேத்கர் அவர்களின் கடுமையான முயற்சியால் வேலை வாய்ப்பில் மட்டுமேதான் இட ஒதுக்கீடு 16(4) கொண்டு வர முடிந்தது. காரணம் அரசியல் சட்ட வரைவு குழு உறுப்பினர்களில் பெரும்பாலானவர்கள் பார்ப்பனர்களே!
தந்தை பெரியார் தலைமையில் திராவிடர் கழகம் கடுமையாக போராடியதன் விளைவாகத்தானே இந்திய அரசியல் சட்டம் முதன் முதலாகத் திருத்தப்பட்டது! கல்வியிலும் இட ஒதுக்கீடு 15(4) என்கிற நிலைமை கொண்டு வரப்பட்டது. கல்வியில் இடஒதுக்கீடு இல்லாவிட்டால் உத்தியோக சாலைகளுக்குள் நுழைவது எப்படி?
திராவிடர் இயக்கம் இந்தத் துறையில் பொறித்துள்ள சாதனை முத்திரைகள் ஒன்றா - இரண்டா?

தாழ்த்தப்பட்டவரை குறிப்பிட்ட அளவில் பள்ளிக் கூடங்களில் சேர்த்துக் கொண்டால் தான் கல்வி மானியம் வழங்கப்படும் என்று ஆணை பிறப்பித்தது டாக்டர் சுப்பராயன் தலைமையில் அமைந்த நீதிக்கட்சி ஆதரவு அமைச்சரவை தானே! (1928).

சென்னை மாநகராட்சி, பிற நகராட்சிகள், மாவட்ட நாட்டாண்மைக் கழகங்கள் போன்றவை நடத்தும் பள்ளிகளில் இன்னும் மிகுதியாகத் தாழ்த்தப்பட்ட வகுப்பு மாணவர்கள் சேர்க்கப்பட வேண்டும் என்று ஒவ்வொரு ஆண்டு இறுதியிலும் பள்ளியில் பயில்வோர் பட்டியிலை அனுப்பும்போது பள்ளியில் சேர்க்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மாணவர் பற்றிய விவரங்களையும் அனுப்ப வேண்டும் என்று ஆணை பிறப்பித்தது பனகல் அரசரை பிரதமராகக் கொண்ட நீதிக்கட்சி ஆட்சிதானே! (11.2.1924)

1935இல் தாழ்த்தப்பட்ட சமுதாய மக்களின் கல்விக்கென்றே 52 லட்ச ரூபாயை ஒதுக்கியது நீதிக்கட்சி என்றால், அந்தக் காலக்கட்டத்தில் அது எவ்வளவுப் பெரிய தொகை? எஸ்.எஸ்.எல்.சி., தேர்வுக்கு செல்லும் ஆதி திராவிடர் மாணவர்கள் தேர்வுக் கட்டணம் கட்டத் தேவையில்லை என்றும் சலுகை செய்யப்பட்டது. 1936இல் அவர்களுக்காக அய்ந்து விடுதிகள் கட்டப்பட்டன.

சுயமரியாதை இயக்கத் தலைவர் .பு..சவுந்தரபாண்டியன் அவர்கள் இராமநாதபுரம் ஜில்லா போர்டு தலைவராக இருந்தபோது தான் (1930) கீழ்க்கண்ட ஆணை பிறப்பிக்கப்பட்டது.

ராமநாதபுரம் ஜில்லா போர்டு தலைவர் சர்வீஸ் பஸ் முதலாளிகளுக்குப் பின் வருமாறு ஒரு சுற்றுக் கடிதம் அனுப்பியிருக்கிறார். அது வருமாறு:

இந்த ஜில்லாவிலுள்ள சில மோட்டார் கம்பெனி முதலாளிகள் ஆதிதிராவிடர்களை தமது பஸ்களில் ஏற்றிக் கொண்டு போவதில்லையென்றும் டிக்கெட்டில் ஆதிதிராவிடர்களுக்கு டிக்கெட் கொடுக்கப்பட மாட்டாது என்றும் நிபந்தனை ஏற்படுத்தியிருப்பதாயும் அறிகின்றோம். இவ்வழக்கம் பிரயாணிகளுக்கு இடைஞ்சல் உண்டு பண்ணத்தக்கதாகவும், மிக அக்கிரமமானதாகவும் இருக்கிறது. ஆகவே மோட்டார் கம்பெனி முதலாளிகள் ஏதேனும் ஒரு சமூகத்தாரை பஸ்சில் ஏற்றிச் செல்ல மறுக்கவோ டிக்கெட்டுகளில் மறுப்பு விதிகள் அச்சிடவோ செய்தால் அவர்களுடைய லைசென்ஸ் முன்னறிக்கை கொடாமலே ரத்துச் செய்யப்படுமென இதனால் எச்சரிக்கை செய்கிறோம் - இந்தச் சுற்றுக் கடிதம் கிடைத்து ஒரு வாரத்துக்குள் அந்தத் தடை விதி நீக்கப்பட்டதா - அல்லவா என்று சாம்பிள் டிக்கெட்டுடன் ரிப்போர்ட் செய்து கொள்ள வேண்டும்.
- (குடிஅரசு ஈரோடு 4.5.1930, பக்கம் 13)

எந்தப் பொது சாலையிலோ, தெருவிலோ, அது எந்தக் கிராமத்திலோ அல்லது நகரத்திலோ இருந்தாலும் அதில் எந்த இனத்தைச் சேர்ந்த மனிதனாய் இருந்தாலும் நடப்பதற்கு உள்ள உரிமையை யாரும் தடுக்க முடியாது என்பதையும் எந்த அரசாங்க அலுவலகமாக இருந்தாலும், அல்லது கிணறு, குளம் போன்றவைகளாய் இருந்தாலும், அல்லது பொது வர்த்தகம் நடைபெறும் இடமாய் இருந்தாலும், இவைகளில் எல்லாம் ஜாதி இந்துக்களுக்கு என்னென்ன உரிமைகள் இருக்கின்றனவோ அவ்வளவு உரிமைகளும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு உண்டு என்பதையும் சென்னை அரசாங்கம் ஒப்புக்கொண்டு, அதைத் தீர்மானமாக நிறைவேற்றி, எல்லா மாநகராட்சி, நகராட்சி, பஞ்சாயத்து மற்றும் அரசாங்கத்தில் உள்ள எல்லா இலாகாக்களுக்கும் அனுப்பப்பட்டது (அரசு ஆணை எண் 2660 உள்ளூர் மற்றும் மாநகராட்சி 25.9.1924) 1936 வாக்கில் இந்த வகையில் 9614 பள்ளிகள் வழிக்குக் கொண்டு வரப்பட்டன.

திரு.இரட்டைமலை சீனிவாசன் அவர்களால் இத்தீர்மானம் கொண்டு வரப்பட்டு நீதிக்கட்சி ஆட்சியில் நிறைவேற்றப்பட்டது.

இரட்டைமலை சீனிவாசன், அயோத்திதாசப் பண்டிதர் ஆகியோர் தாழ்த்தப்பட்ட மக்களுக்காகப் பாடுபட வில்லை என்று யார் சொன்னார்கள்? சமுதாய விழிப்புணர்வு இல்லாத அக்கால கட்டத்தில், அவர்கள் தாங்களாகவே முன் வந்து ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக உயிரைக் கொடுத்துப் பாடுபட்டனர் என்பது வரலாறாகிவிட்ட உண்மை!

அயோத்திதாச பண்டிதர் கால கட்டம் வேறானதால் நீதிக்கட்சியோடு இணைப்பை ஏற்படுத்திக் கொள்வதற்கு வாய்ப்புக் கிட்டாது போயிற்று. அதே நேரத்தில்  அவருக்குப் பின் அவரது வழித்தோன்றலாகத் திகழ்ந்த ரெவரெண்ட் ஜான் ரத்தினம் அவர்கள் நீதிக் கட்சியோடு நகமும் சதையுமாக ஒட்டி உறவாடினார் என்பதை மறக்க முடியாது.
இரட்டைமலை சீனிவாசன் அவர்கள் நீதிக்கட்சியோடும் அதன் தலைவர்களோடும் பின்னிப் பிணைந்திருந்தவர் - உண்மை என்னவென்றால் அயோத்திதாசப் பண்டிதர் அவர்களும் இரட்டைமலை சீனிவாசன் அவர்களும் நெருக்கமாக - உறவினர்களாக இருந்திருந்தபோதிலும், அவர்களுக்குள் கருத்து மாறுபாடு உடையவர்களாகவே காணப்பட்டார்கள்.

இந்த நிலையில் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக இரட்டை மலை சீனிவாசன் பாடுபடவில்லையா? அயோத்திதாசப் பண்டிதர் பாடுபடவில்லையா? என்று மித்திர பேதம் செய்கின்ற முறையில் எழுதுவதைத் தவிர்ப்பது நல்லது. பார்ப்பனர் அல்லாதார் இயக்கமாகச் செயல்பட்ட நீதிக்கட்சியின் செயல்பாட்டில் தாழ்த்தப்பட்ட மக்களின் தலைநிமிர்வுக்கு தனிச் சிறப்பான இடம் இருந்திருக்கிறது!

கல்வியில் மட்டும் கவனம் செலுத்தவில்லை - தாழ்த்தப்பட்ட மக்களின் பொருளாதார முன்னேற்றத்திற்கும் முன்னுரிமை அளித்தது நீதிக்கட்சிதான். தரிசு நிலங்களை விவசாயத்துக்கு அளித்தபோது தாழ்த்தப்பட்ட சகோதரர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்பட்டது.

31.3.1935 தேதியிட்ட ஒரு புள்ளி விவரப்படி 4 லட்சத்து 4000 ஏக்கரா நிலங்கள் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது.
நாட்டில் 2776 சங்கங்கள் நிறுவப்பட்டு, வீட்டு மனைப் பட்டாக்கள் வாங்குதல், வீடு கட்டுதல், விவசாய தொழிலுக்கான மாடு, ஏர், கலப்பை மற்றும் கருவிகள் வாங்குதல், வெள்ள நிவாரணம் முதலியவற்றுக்காக கடன் உதவி செய்யப்பட்டது.
இவற்றையெல்லாம் தொடுக்க ஆரம்பித்தால் பல்லாயிரம் பக்கங்கள் ஆகலாம்.

ஆனாலும் பிரச்சினைகளைக் கிளப்பும்பொழுது புதுத் தலைமுறையினர் மூளையை எட்ட ஒரு சில கூறப்படத்தான் வேண்டியுள்ளது. ஏதோ - அப்பொழுது சுயமரியாதை இயக்கம், நீதிக் கட்சிகள் தாழ்த்தப்பட்ட மக்களுக்காகப் பாடுபட்டு இருக்கலாம் - இப்பொழுது உங்களின் செயல்பாடு என்ன என்று கேட்கட்டும் - பதில் சொல்லத் தயார் நிலையில் தான் இருக்கிறது கழகம்.
 

 
(நூல் - தந்தை பெரியாரும்  தாழ்த்தப்பட்டோரும்! ஆசிரியர் தஞ்சை ஆடலரசன்)





Comments

Popular posts from this blog

தந்தை பெரியாரும், தாழ்த்தப்பட்டோரும் - 1

தந்தை பெரியாரும் தாழ்த்தப்பட்டோரும் - 9

ஜாதியை உருவாக்கியவர்கள் ஆரியர்களா? வடுகர்களா?