Posts

Showing posts from January, 2018

தந்தை பெரியாரும் தாழ்த்தப்பட்டோரும் - 9

படித்துவிட்டு வேலை இன்றித் தவிக்கும் நம் இன மாணவ – மாணவியர் ! மண்டல் கமிஷன் கடும் உழைப்பில் சேகரித்த புள்ளி விவரங்கள் (2)   தாழ்த்தப்பட்ட மக்களுக்கு குஜராத் மாநிலத்தில் அளிக்கப்பட்ட இட ஒதுக்கீட்டை எதிர்த்து பெருங் கலவரத்தில் ஈடுபட்டனர் ; தாழ்த்தப்பட்ட தோழர்கள் அங்குக் கொளுத்தப்பட்ட நிகழ்ச்சியும் உண்டு . அதனை ஆதரித்துத் தமிழ்நாட்டிலும் பேரணி ஒன்றை நடத்த முன் வந்தனர் - உரிமை பறிக்கப்பட்ட முற்படுத்தப்பட்டோர் என்ற போர்வையில் ! அதற்கான தேதி - 22.3.1981 என்று அறிவிக்கவும் பட்டது . அதற்கு முதல் நாள் சென்னை தியாகராயர் நகரில் திராவிடர் கழகத்தின் சார்பில் கண்டனப் பொதுக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு , கழகப் பொதுச் செயலாளர் முழக்கமிட்டார் - எச்சரித்தார் . முற்படுத்தப்பட்ட ஆதிக்கவாசிகள் பேரணி கிளம்பும் அதே இடத்திலிருந்து எதிர்ப் பேரணி கிளம்பி அதே பாட்டையில் செல்லும் என்று போராட்ட அறிவிப்பைக் கொடுத்தார் . தடை விதித்தால் மீறப்படும் என்று போர்ச் சங்கு ஊதினார் . விளைவு - அவர்களின் பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டது . வகுப்புரிமையை எதிர்த்து உண்ணாவிரதம்...